அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, அதானி குழுமம், பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், ரிலையன்ஸ் நிறுவனமே அதிக பங்குகளை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பம் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பிரதமர் மோடி வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.