அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர், கடுமையான இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சோதனைச் செய்த மருத்துவர்கள் ஆரம்பத்தில் அவருக்கு நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால், எக்ஸ்ரே எடுத்துப்பார்த்தபோது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த எக்ஸ்ரேவில், இருமலால் பாதிக்கப்பட்டிருந்த நபரின் நுரையீரலில் அவரின் 0.6 அங்குல மூக்கு வளையம் ஒன்று சிக்கியிருந்ததைக் கண்டுள்ளனர். 5 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மூக்குவளையம் தனது நுரையீரலிலே இருந்ததை கண்டுபிடித்த அந்த நபர் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளார். தூங்கும்போது மூக்குத்தி உள் இழுத்து கொண்டதாகவும் மறுநாள் காலை அதை படுக்கையில் தேடி பார்த்து கிடைக்காததால், அதை விழுங்கி இருப்பேன் என்று நினைத்தாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் மூக்கு வளையத்தை அகற்றினர்.