கோவை மாவட்டம் சித்தாபுதூரில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாஜக அலுவலகம் நோக்கி பெட்ரோல் குண்டை வீசியதாகக் கூறப்படுகிறது. அங்கு இருந்த காவலர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த காவல் துறையினர், சம்வ இடத்தில் வீசப்பட்டிருந்த பெட்ரோல் குண்டுகளை ஆய்வு செய்தனர். பின்னர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுத்தொடர்பாக, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பெட்ரோல் குண்டு வீச்சால் பாஜக சசோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விட யாரும் நினைக்க வேண்டாம். சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணி இதுப்போன்ற அச்சுறுத்தல்களே மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை அரசு உணரவேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.