ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலை என்றால்,சாதாரண பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்று அதிர வைக்கிறது இந்த சம்பவம்.சிவில் பாதுகாப்புத்துறையில் அதிகாரி இருந்தவர் ரபியாஷைஃபி.21 வயதாகும் ரபியா டெல்லி சங்கம் விகார் பகுதியில் வசித்து வருகிறார்.கடந்த 26-ம் தேதி பணிக்கு சென்ற ரபியா,வீடு திரும்பவில்லை.அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர்,பல இடங்களில் தேடியுள்ளனர்.அவர் கிடைக்காத நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் காணாமல் போன ஷைஃபி, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பிரேத பரிசோதனை அறிக்கையில்,அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவருடைய மார்பகங்களை வெட்டி,தொண்டையை அறுத்து,அந்தரங்க உறுப்புகளை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.அது மட்மில்லாமல் அவருடைய உடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கிழித்து இந்தப் படுகொலை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக நிஜாமுதீன் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.’ரபியாவை நிஜாமுதின் ரகசியமாக திருமணம் செய்ததை அவருடைய பெற்றோர்கள் ஏற்காத நிலையில்,அவருடன் தனியாக வாழ்ந்து வந்ததாக விசாரணையில் நிஜாமுதின் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் அவருடைய நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது நிஜாமுதீன் ரபியாவை கொன்றதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இதனை அவருடைய பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.நிஜாமுதீன் ரபியாவிற்கு நண்பர் மட்டுமே என்றும்,அவரே கடத்தி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள ரபியாவுக்கு நீதிகேட்டு சமூக வலைதளங்களில் #JusticeForRabiya ஹெஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.நிர்பயாவை நினைவுபடுத்தும் இந்த சம்பவத்தை ஊடகங்களும்,அரசாங்கமும் இதுவரை பேசாத நிலையில்,தற்போது தான் சமூக வலைதளவாசிகள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.உயர் பதவியில் உள்ள பெண்களுக்கே இந்த நிலை என்றால்,சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகி உள்ளதாக பெண்கள்அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது