உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சிறுமி ஒருவர் ஐந்து நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அரைகுறை ஆடையுடன் நள்ளிரவில் வீட்டுக்கு சில கிலோமீட்டர் நடந்தே வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமி நடந்து வரும் போது, அதை வீடியோ எடுத்த சிலர் அதை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒரு துணி கொடுத்துக்கூட உதவாமல் வீடியோ எடுத்ததுடன் அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சிறுமி மீதான பாலியல் பலாத்காரம் குறித்து காவல் நிலத்தில் புகார் அளித்து முதலில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடும் போராட்டத்துக்கு பிறகே முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.