மதுரையில் வாடிக்கையாளர் ஒருவர் நாகமலை புதுக்கோட்டை ஆவின் டெப்போவில் வாங்கிய ஆவின் பால் பாக்கெடுக்குள் ஈ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக, வாடிக்கையாளர் செய்த புகாரின் அடிப்படையில், ஈ இருந்த பால் பாக்கெட்டை ஆவின் பால் விற்பனையகத்தினர் திரும்பப்பெற்றுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்யப்படும் என்றும் பேக்கிங் செய்யும்போது இந்த தவறு நடத்திருக்கலாம் என்றும் தெரிவித்ததுடன் இனி இதுபோல் தவறுகள் நடக்காது என்றும் உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக உதவி மேலாளர் சிங்காரவேலனை பணியிடை நீக்கம் செய்து ஆவின் பொதுமேலாளர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.