இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியுடன் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 208 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை எடுத்து ஆட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.