ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே61 என்ற பெயரிப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி போன்ற நடிகர்களும் இணைந்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் அஜித் ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புகள் முடிந்தவுடன் தனது நண்பர்களுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி, சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அஜித், தொடர்ந்து இமயமலை பகுதிகளிலும் பயணித்து வருகிறார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள காணொளியில் ரசிகர் ஒருவர் 3 நாட்களாக அஜித்தை தேடுவதாக கூறியதும், நான் என்ன கொலைக்காரனா, கொள்ளைக்காரனா என்று அஜித் நகைச்சுவையாக கேட்கும் காட்சி வைரலாகி வருகிறது.