மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இந்திக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது, இந்தி அல்லது சமஸ்கிருதத்தை முதன்மை மொழியாக தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருந்தாலும், மாநில அரசின் ஊக்கத்தொகை அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டு பேசிய அமைச்சர், வளர்ந்த பிறகு ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது சற்று சிரமம் என்றும் அவர் பேசியுள்ளார். தனது கணவரின் தாய்மொழியான தெலுங்கை தன்னால் எளிதாக கற்றுக்கொள்ள முடிந்தது போல், இந்தியை கற்றுக்கொள்வது சுலமாக இல்லை எனவும், ஒருவேளை இந்தியை கற்றுக்கொள்ள கடினமாக இருந்ததற்கு, கடந்த கால அனுபவங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் அவரே பதில் கூறியுள்ளார். மிகுந்த தயக்கத்துடனே இந்தியில் பேசுவதால், தன்னால் சரளமாக இந்தியில் பேச முடிவதில்லை என்று கூறிய நிர்மலா சீதாராமன் 35 நிமிடங்கள் இந்தியிலேயே தனது இந்தி மொழி பேச்சாற்றல் குறித்து எடுத்துரைத்தார்.