இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் கடந்த 8ஆம் தேதி தனது 96 வயதில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடல் விமானம் மூலம் நேற்று முன்தினம் லண்டன் கொண்டு செல்லப்பட்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அங்கு இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அரச குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலிக்கு பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராணியின் இறுதி சடங்கு வருகிற 19ஆம் தேதி லண்டனில் நடக்க இருக்கிறது. இதில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் இறுதி சடங்கில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக வரும் 17ஆம் தேதி லண்டன் செல்கிறார்.