டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, போலி மற்றும் செயல்படாத கணக்குகள் குறித்த தகவல்களை ட்விட்டர் நிறுவனத்திடம் அவர் கேட்டிருந்தார். ஆனால், அந்த தகவல்களை எலான் மஸ்கிடம் ட்விட்டர் நிறுவனம் கொடுக்காமல் காலம்கடத்தவே, டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதையடுத்து, ஒப்பந்தப்படி நிறுவனத்தை வாங்காமல் தவறியதால் எலான் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்குத்தொடுத்துள்ளது. இந்த நிலையில், ரூ.3.5 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்-க்கு விற்க ட்விட்டர் நிறுவன பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, டெஸ்லா நிறுவனம் ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்தபோது, அதை வாங்கபோவதில்லை என்று அறிவித்தபோதும் பங்கு சந்தையில் அதன் பங்குகள் மிகுந்த ஏற்ற இறக்கங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.