இந்தி மொழி தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி மொழி பேசுபவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தி மொழி தினத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உலக அளவில் இந்தி மொழி இந்தியாவுக்கு சிறந்த பெருமையை சேர்த்துள்ளது. அதன் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்வு திறன் எப்போதும் மக்களை ஈர்க்கிறது. நாட்டின் மிகப்பெரிய பேசும் மொழியை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.