சென்னை, கலைவாணர் அரங்கத்தில் சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் தமிழக காவல்துறை கொண்டுவந்துள்ள ‘சிற்பி’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை இந்த சிற்பி திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போல் காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கென பிரத்யேக சீருடை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.