ஆப்பிரிக்க குடியரசு நாடான கென்யாவின் 5ஆவது அதிபராக வில்லியம் ரூட்டோ இன்று பதவியேற்று கொண்டார். முன்னதாக, கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை வீழ்த்தி வெற்றிப்பெற்றார் ரூட்டோ. ஆனால், தற்போதைய அதிபராக இருந்த உஹுரு கென்யாட்டாவின் துணை அதிபராக இருந்த ரூட்டோவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் மனு தொடுத்தன. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று வில்லியம் ரூட்டோ அதிபரானார்.