புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் “இந்திய திரைப்பட விழா 2022″-ல் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கூழாங்கல் திரைப்படத்தின் இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜுக்கு புதுச்சேரி மாநிலத்தின் சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதும் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையையும் அந்த மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார். 2021ஆம் ஆண்டு வெளியான கூழாங்கல், இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய முதல் திரைப்படமாகும். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவாளர்களாக ஜெயா. பார்த்திபன், விக்னேஷ் , படத்தொகுப்பாளராக கணேஷ் சிவாவும் பணியாற்றியுள்ளனர். பல பன்னாட்டு திரைப்பட விழாக்களில் கூழாங்கல் திரைப்படப்பட்டதுடன் விருதுகளையும் வென்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.