இந்தியா முழுவதும் வியாழக்கிழமையான இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 6,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 6,614 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் மொத்தம் இதுவரை 4,39,00,204 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 33 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் பலியாகியுள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,090 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 50,342 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.