தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சராக மணீஷ் சிசோடியாவும் இருந்து வருகின்றனர். இந்தநிலையில், ஆளும் கட்சியின் கலால் கொள்கை தொடர்பாக டெல்லியில் பல்வேறு இடங்களிலும், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் என மொத்தமாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மதுபானம் விற்க ஒப்பந்தம் செய்த வணிகர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைப்பெற்று வரும் இந்த சோதனைத் தொடர்பாக 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் நபராக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.