day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்களைக் காக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் – லதா ரகுநாதன்

பெண்களைக் காக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் – லதா ரகுநாதன்

கொரோனாவின் இரண்டாம் அலைக்குப் பிறகு பலரும் நீரிழிவு, இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். காரணம், இதுபோன்ற துணைநோய் உள்ளவர்கள்தான் கொரோனாவால் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஆனால், இதுபோன்ற நோய்களுக்கும் பிற நோய்களுக்கும் சிகிச்சை பெற ஆகும் செலவில் இருந்து நம்மைக் காப்பவையாக காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் ஆரம்பத்தில் பொதுவானவையாகத்தான் இருந்தன. நோய் என்று வரும்போது அதில் ஆண் என்ன பெண் என்ன? ஆனால், இப்போது காப்பீடு நிறுவனங்கள் மாறுபட்டுச் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. இதற்கான காரணம், பெண்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தங்களும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பழக்கங்களும் தற்போது பெண்களுக்குப் பலப் பல வாழ்க்கைமுறை நோய்களை ஏற்படுத்துகின்றன. தெளிவாக இந்த நோய்களைப் பட்டியலிட்டுச் சொல்வதென்றால், ஆர்த்தரைடிஸ், ப்ரெஷர், டயாபெட்டிஸ், ஆட்டோ இம்யூன் நோய்கள், ஆஸ்ட்ரியோபொராசிஸ் போன்றவை. இன்னும் சொல்லப்போனால் மார்பகப் புற்றுநோய் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் பெண்களுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம்.
இவற்றோடு பட்டியலை நிறுத்திவிட முடியாது. பிரசவம் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய ஹார்மோன் குறைபாடுகள், இதய நோய், தைராய்டு குறைபாடு என்று நோய்கள் தொடர்கின்றன. இவற்றை மனதில் கொண்டு பல காப்பீட்டுத் திட்டங்கள் பெண்களுக்கான பிரத்தியேக நோய்களைத் திட்டத்தில் இணைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில திட்டங்களைப் பார்ப்போம்
1. Bajaj Alliance Women – Specific Critical Illness Insurance Plan
இந்தக் காப்பீட்டின்கீழ் பெண்களுக்கு வரக்கூடிய 8 வித நோய்களுக்கான பாதுகாப்புத் திட்டம் கொடுக்கப்படுகிறது.
புற்றுநோய் – மார்பகம், பிறப்புறுப்பு, கருப்பைவாய், சினைப்பை, கருக்குழாய், கருப்பை உள்ளிட்ட புற்றுநோய்களை இந்தக் காப்பீட்டுத் திட்டம் உள்ளடக்குகிறது. பெண்களுக்கு இவ்வகையான ஏதேனும் ஒரு புற்றுநோய் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு குறிப்பிட்ட தொகை காப்பீடாகக் கொடுக்கப்படுகிறது.
பிறவி இயலாமை என்று இருந்தால் எடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையிலிருந்து 50 சதவீதம் கொடுக்கப்படும். இப்பெண்கள் வேலைக்குச் செல்பவராக இருக்கும்பட்சத்தில், இந்தச் சிக்கலான நோயின் காரணமாக அவர் வேலையை விட நேர்ந்தால், மூன்று மாதத்திற்குப் பின்னர் சிறப்புத்தொகை ஒன்றும் அளிக்கப்படும்.
2. Tata AIG Wellsurance Woman Health Insurance Plan
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பெண்களின் 11 வகையான நோய்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்:
குறிப்பிட்ட மருத்துவமனைகளில் பணமில்லாது சேர்த்துக்கொள்ளப்படும் திட்டம்.
தினசரி மருத்துவமனை செலவுகளுக்கான பணமும் கொடுக்கப்படும்.
குணமடையத் தேவையான வசதிகளும் அளிக்கப்படுகின்றன.
மருத்துவமனையிலிருந்து வந்த பின்னர் கொடுக்கப்படும் சிகிச்சைகளும் காப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
விபத்தின் காரணமாகப் புனரமைப்பு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கும் இந்தக் காப்பீடு பாதுகாப்பு அளிக்கிறது.
பிரிவு 80D-யின் கீழ் வருமான வரி விலக்கும் காப்பீட்டு ப்ரீமியம் தொகைக்குக் கொடுக்கப்படுகிறது.
உடல்நலம் பற்றிய கேள்விகளுக்குத் தனி உதவி லைன், உடல் நலச் சோதனைகளுக்கும் ஆரோக்கிய மையங்களுக்கும் செலுத்தப்படும் கட்டணத்தில் தள்ளுபடியும் உண்டு.
3. Care Joy Maternity Health Insurance Plan
இந்தக் காப்பீடு, பிரசவத்திற்காகவும், அதன் பின்னர் பிறக்கும் குழந்தை நலனுக்காகவும் இணைந்து செயல்படுகிறது.
இரண்டுவிதத் திட்டங்களாக இந்தக் காப்பீடு உள்ளது. Joy Today மற்றும் Joy Tomorrow.
Joy Today திட்டத்தில் காப்பீடு செய்யக்கூடிய தொகை ரூ.3 – 5 லட்சம். பிரசவ செலவுகளை இந்தக் காப்பீடு பாதுகாக்கிறது. ஆனால், இந்தக் காப்பீடு 24 மாத காத்திருப்புக் காலம் கொண்டது. Joy Tomorrow-வின் காத்திருப்புக்காலம் 9 மாதம்.
Joy Tomorrow திட்டம், பிறந்த குழந்தைக்கு ஊனங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் உள்ளடக்குகிறது.
இந்தக் காப்பீட்டை 1 – 45 வரையிலுள்ள பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்.
பிரசவ கால செலவுகளான மருத்துவமனை அறைக்கான செலவு, ஐ.சி.யூ., தொகை, சாப்பாடு மற்றும் செவிலியர் தொகை, மருத்துவமனையில் சேரும் முன் மற்றும் பின் செலவுகள், பிரசவத்திற்கு முன் மற்றும் அதற்குப் பின்பான செலவுகள் என்று அனைத்தும் காப்பீட்டுக்குள் அடங்குகிறது.
சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் சிகிச்சை செலவுகள் மற்றும் தடுப்பூசி தொகைகளுக்கும் காப்பீடு உண்டு.
4. Reliance Health Gain Policy
இந்தக் காப்பீடு தனி நபருக்கும் அல்லது மொத்தக் குடும்பத்துக்கும் என இரண்டு விதமாக எடுக்கப்படலாம். குறிப்பிட்ட மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம்.
ஒரு பெண் அல்லது பெண் குழந்தைக்கான ப்ரீமியம் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி உண்டு.
உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டால், தானம் செய்தவருக்குக் காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் கொடுக்கப்படும். இதற்கான உயர்ந்தபட்ச தொகை ரூ. 5 லட்சம்.
வீட்டிலிருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டால் அவற்றைக் காப்பீட்டில் கோரலாம்.
ஒரு முறை தொகை உபயோகப்படுத்தப்பட்டு விட்டாலும், மறுபடியும் முதலில் எடுத்த காப்பீட்டுத் தொகைக்கு உயர்த்தப்படும்.
ப்ரீமியம் தொகையைத் தவணை முறையிலும் செலுத்தலாம்.
வயது வரம்பு 91 நாட்கள் முதல் 65 வயது வரை மட்டுமே.
5. HDFC ERGO my health Women Suraksha Plan.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பல வகைத் திட்டங்கள் உள்ளன. பெண்களுக்கு வரக்கூடிய அனைத்துவிதமான நோய்களையும் காப்பீட்டின்கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
a. HDFC Women Cancer Plus Plan.
புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்கள் இதன்கீழ் வருகிறது.
காப்பீட்டுத்தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை.
எல்லாவகை புற்றுநோய்களுக்கும், முதல்கட்ட நோய் என்றால் காப்பீட்டுத்தொகையில் 25 சதவீதம் செலவுகளுக்காகக் கொடுக்கப்படும். இதன் உயர்ந்தபட்ச அளவு ரூ.10 லட்சம்.
ருமாட்டிக் ஆர்த்தரைட்டிஸ், Systemic Lupus Erythematosus with Lupus Nephritis மற்றும் இதர கொடுநோய்களுக்கும் காப்பீடு உண்டு.
வேலைக்குச்செல்ல முடியாமல் போனால், அதற்கென உதவித்தொகையும், செலுத்த வேண்டிய ப்ரீமியம் தொகையில் தள்ளுபடியும் உண்டு.
b. Women Critical Illness Essential Plan.
இதன்கீழ் அனைத்துப் பெரிய நோய்களும், புற்றுநோய், இதய நோய் மற்றும் அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. பெரிய நோய்களுக்கு 90 நாட்களும் சிறிய நோய்களுக்கு 180 நாட்களும், பிரசவத்திற்கு 1 வருடமும் காத்திருப்பு நேரம் உண்டு.
c. Women Critical Illness Comprehensive Plan
இதன்கீழ் புற்றுநோய்க்குக் காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கான செலவாக முழு காப்பீட்டுத்தொகையும் கொடுக்கப்படுகிறது. இதய நோய் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகளும் இதில் அடக்கம்.
d. Women Cardiac Plan
இதய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவச் செலவுகளுக்கும் இந்தக் காப்பீடு பாதுகாப்பளிக்கிறது.
e. Women Assault and Burns
தீக்காயங்களுக்கும் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்கும் காப்பீடு அளிக்கிறது.
f. New India Asia Kiran Health Plan
ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள பெற்றோருக்கான திட்டம். இதில் 18 முதல் 65 வயதானவர்கள் மட்டுமே இணையலாம்.
65 வயதிற்கு மேலும் இந்தக் காப்பீட்டைத் தொடரலாம். அதற்கு ப்ரீமியம் தொகையைக் காலம் தவறாமல் கட்டியிருக்க வேண்டும்.
கல்யாணமாகாத பெண்களுக்கும், மனநிலை குன்றிய பெண்களுக்கும் இந்த 65 வயது வரம்பு பார்க்க மாட்டார்கள்.
காப்பீடு செய்யப்பட்டவர், காப்பீடு காலத்தில் பெரும் நோயால் தாக்கப்பட்டால் காப்பீட்டுத்தொகையில் 10 சதவீதம் அதிகமாகக் கொடுக்கப்படும்.
மேலே சில திட்டங்களைப் பார்த்தோம். பெண்களுக்கென தனி பாதுகாப்பு தேவைப்படுவதை உணர்ந்து ஏற்பட்ட சமீபகால மாற்றங்கள்தான் இவை.
இப்போது அனைவர் மனதிலும் எழக்கூடிய ஒரு கேள்வி, ஒரு நல்ல காப்பீட்டுத் திட்டத்தை எவ்வாறு தேர்வு செய்ய இயலும் என்பதுதான். இதற்கு எடுக்கப்போகும் காப்பீடு பற்றிய முழு விவரமும் சேகரித்தல் அவசியம்.
காப்பீட்டை எப்படித் தேர்வு செய்வது?
முதலில், நாம் எடுக்கப்போகும் காப்பீட்டின் மொத்த தொகை அதன் உபயோகத்துக்கு ஏற்ப குறைக்கப்படுமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ஒரு உதாரணம், நம் காப்பீட்டுத்தொகை ரூ. 10 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடம் இதய சிகிச்சை நடைபெறுகிறது. அதற்கான காப்பீட்டுச் செலவின் அளவு ரூ. 5 லட்சம். இப்போது இனிவரும் காலங்களுக்கு நாம் செலுத்தும் ப்ரீமியம் ஒரே அளவிலிருந்தாலும், நம் காப்பீட்டு அதிகபட்ச தொகை ரூ. 5 லட்சமாகக் குறைக்கப்படக் கூடாது. நாம் கணிசமான தொகையை உபயோகப்படுத்தி இருந்தாலும், நாம் காப்பீடு எடுக்கும்போது இருந்த தொகைவரை இப்போது உயர்த்தப்படவேண்டும்.
அடுத்து, நிறுவனம் cashless claims முறையைச் செயல்படுத்துகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் கொடுக்கும் மருத்துவமனை பட்டியலை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இது போன்ற வசதி இருந்தால், நாம் மருத்துவமனையில் பணமின்றி அனுமதிக்கப்படுவோம்.
அடுத்தது, நாம் செலுத்த வேண்டிய காப்பீட்டுத்தொகை அதாவது ப்ரீமியம் வருடா வருடம் வயது ஏறுவதற்குத் தக்கவாறு உயர்த்தப்படக் கூடாது. சில நிறுவனங்கள் நாள் செல்லச் செல்ல சில தள்ளுபடிகளும் கொடுக்க வாய்ப்புண்டு. இவற்றைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
பல காப்பீடுகள் 60 அல்லது 65 வயதை அதிகபட்ச வயதாகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சில காப்பீடுகள் குடும்ப பாலிசியாக எடுக்கப்பட்டால், வயதானவர்களும் அதில் இணைக்கப்படுவார்கள்.
பெண்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தால், வேலை பார்க்கும் நிறுவனத்தில் Employee group insurance உள்ளதா, அதில் நீங்கள் இணைக்கப்பட்டுள்ளீர்களா, எந்த வகை நோய் களுக்கு இங்கே காப்பீடு உண்டு என்பதைத் தெரிந்துகொண்டு பின்னர் தேவையான தனி மனித காப்பீட்டை எடுத்துக்கொள்ளலாம்.
தேவையான காப் பீட்டை, சரியான நேரத்தில் எடுத்து, பாதுகாப்புடன் இருங்கள்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!