அமெரிக்க நாட்டின் ‘அம்ட்ராக்’ ரயில் சேவை நிறுவனம் ‘trains’ என ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்தது. அதைத் தொடர்ந்து ஒற்றை ட்வீட் உலகம் முழுவதும் ட்ரெண்டானது. உலக தலைவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் தொடங்கி இப்போது ஒவ்வொரு ட்விட்டர் பயனரும் ஒற்றைச் சொல்லில் ட்வீட் செய்து வருகின்றனர். அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘democracy’ (ஜனநாயகம்) எனவும், நாசா, ‘universe’ (பிரபஞ்சம்) என்றும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ‘கிரிக்கெட்’ எனவும் பதிவிட்டு வந்தனர். அதேசமயம், தமிழக அரசியல் தலைவர்களில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திராவிடம்’ எனவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘தமிழ்நாடு’ எனவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘தமிழன்’ எனவும் ஒவ்வொருவரும் ஒரு வார்த்தை ட்வீட் புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.