சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சென்னையில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நடந்த இந்து முன்னணி அமைப்பின் நிகழ்ச்சியில் பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலராக இருக்கும் கனல் கண்ணன் ”இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சியே. தொடர்ந்து இந்துக்களுக்காக போராடுவேன்” என்று பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கனல் கண்ணன் ஜாமின் மனு விசாரணையின் போது, ”தேவையற்ற கருத்துக்களைப் பேசுவது ஃபேஷனாகிவிட்டது” என்று நீதிபதி மனுதாரரை கடிந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.