உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். இதையடுத்து, அவர் வகித்துவந்த தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம். எனவே, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்-ஐ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியாகியுள்ளது.