கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என்ற இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு 3ஆவது முறையாக நடிகர் சிம்பு-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் ’வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி, முக்கிய வேடத்தில் ராதிகா நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். வெந்து தணிந்தது காடு வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது மேலும் 2 பாடல்களும் டிரைலருடன் வெளியாகியுள்ளது.