மியான்மர் நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வெற்றிப்பெற்ற ஆங் சாங் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி, தேர்தலில் வெற்றிப்பெற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி ராணுவம் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஆங் சாங் சூகியின் ஆட்சியை கலைத்து அவருடன் இன்னும் சில அரசியல் தலைவர்களையும் கைது செய்தது. அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, ஆன் சாங் சூகி-க்கு பல்வேறு வழக்குகளில் மொத்தமாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு வழக்கில் தற்போது மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.