உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. இதுவரை பலருக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக இருந்த அப்டேட்கள் இனி சிலருக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தவுள்ளது. ஆம், தற்போது வருகிற அக்டோபர் 24 முதல் ஐஓஎஸ் 10 (iOS 10) மற்றும் ஐஓஎஸ் 11(iOS 11) மென்பொருள் தளங்களில் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது. ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 பரவலாகப் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி மாடல்கள் இந்த மென்பொருள் மூலமே இயங்கி வருகிறது. இதனால், இந்த மாடல்களை பயன்படுத்துவோர் சாப்ட்வேர் அப்டேட் செய்யவேண்டும் என்ற எச்சரிக்கை செய்தியை வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களுக்கு அனுப்பியுள்ளது. அதுபோல ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆண்ட்ராய்டு 4.1 (Android 4.1) அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டிருந்தால் மட்டுமே இனி வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.