விமானந்தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் இந்தியாவிலேயே முற்றிலும் வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது, அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த கப்பலை இந்தியா வடிவமைத்ததின் மூலம் விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட சில நாடுகளில் பட்டியலில் இணைந்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில், 1,700 வீரர்கள் பயணிக்கும்படியும், மிக் – 29கே போா் விமானங்கள், கமோவ் – 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் – 60ஆா் ஹெலிகாப்டா்களை இயக்கவும் தரையிறக்கம் செய்யும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.