கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகெப்பள்ளி பகுதியில் கூகுள் மேப்பை பின்தொடர்ந்து சென்ற ஓட்டுநர் தரைப்பாலத்தை தாண்டி காரை செலுத்தியதால் 5 அடிக்கு மேல் நீர் காருக்குள் சென்றுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பயணித்து தண்ணீரில் சிக்கிய 4 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட காரை லேசான பாதிப்புகளுடன் மீட்டுள்ளனர்.