ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உலக பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்களான பிரணாய்-லக்ஷயா சென் இருவரும் மோதினர். 21-17, 16-21, 17-21 என செட் கணக்கில் பிரணாய் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளார். பிரணாய்-லக்ஷயா சென் இருவரும் இதுவரை நான்கு போட்டிகளில் பங்கேற்று இருவரும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளனர். இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.