காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லும் சோனியா, அவரது தாயையும் சந்திக்கவுள்ளார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் சோனியாவுடன் பயணம் மேற்கொள்கின்றனர். பின் இந்தியா திரும்பும் சோனியா காந்தி வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி அன்று டெல்லியில் நடைபெறும் காங்கிரஸின் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளார்.