நாடு முழுவதும் தமிழகம், தெலுங்கானா உட்பட 13 மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,085 கோடி நிலுவைத் தொகை வைத்துள்ளதால் இந்த மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதையடுத்து, மத்திய அரசின் மின் தொகுப்பிற்கு தமிழக அரசு சார்பில் செலுத்த வேண்டிய பாக்கி ரூ.70 கோடி மட்டுமே உள்ளது. அது ஓரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும். மத்திய அரசின் போர்டலில் சரிவர வரவு வைக்கப்படாத காரணத்தால் நிலுவை அதிகமாக காட்டப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் தடை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.