தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர், விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்கள் 89 பேர் மற்றும் தொழிற்கல்வி 2 பேர் என மொத்தம் 124 பேர் மட்டும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளனர்.