முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் 78ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் அவரது சமாதி அமைந்துள்ள வீர் பூமியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, அவர் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன், என் இதயத்தில் இருக்கிறீர்கள். நாட்டுக்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ராஜிவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தனது அஞ்சலியை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.