நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஹர் ஹர் டிரையங்கா என்ற நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும், வாகனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிட்டனர். இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் டிஜிட்டல் முறையில் இந்திய தேசியக்கொடி காட்சிப்படுத்தப்பட்டது.