உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆல் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான செயல் இயக்குநர் பிரஃபுல் படேலின் பதவிக்காலம் முடிந்த பிறகும் பதவியில் நீடித்து வருவதை காரணமாக சுட்டிக்காட்டி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா தனது அமைப்பில் இருந்து இந்தியாவை இடைநீக்கம் செய்துள்ளது. இதன்மூலம், யு17 மகளிர் உலகக் கோப்பையை வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்த பெற்றிருந்த உரிமையை இந்தியா இழந்துள்ளது.