திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் மாரியம்மன் கோயில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் அதே பகுதியை சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார் (34) கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் சிகிச்சையினால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பலியானார். இவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும் சந்தோஷ், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், வினோத்குமார் கரணம் அடித்துக்கொண்டே இருக்குபோது மயங்கி விழுந்த காட்சி தற்போது சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.