இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 லீக்குகளிலும் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் புதிதாக நடக்கவுள்ள டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் டி20 அணி உரிமையாளர்கள் சார்பிலும் அணிகள் வாங்கப்பட்டுள்ளதால், அதில் இந்திய வீரர்கள் பயிற்சியாளர்களாகவும், விளையாடவும் இருந்தனர். இந்த நிலையில் பிசிசிஐயின் இந்த அறிவிப்பால் இந்திய அணி வீரர்கள் யாரும் தென்னாப்பிரிக்க டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.