சனிக்கிழமையான இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் மேலும் புதிதாக 15.815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,42,39,372-ஆக அதிகரித்துள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,19,264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களில் மேலும் 68 பேர் இறந்துள்ளதால், இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 5,26,996 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 20,018 போ் குணமடைந்துள்ளதையடுத்து, குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,35,93,112-ஆக அதிகரித்துள்ளது.