பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், பேருந்தின் முன் மற்றும் பின்பக்கம் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட 50 பேருந்துகளின் சேவையை முதற்கட்டமாக அமைச்சர் சிவசங்கருடன் இணைந்து சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இதையடுத்து, சென்னையில் இயக்கப்படும் இதர சாதாரண கட்டண பேருந்துகளுக்கும் முன் மற்றும் பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு வண்ணம் விரைவில் பூசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அரசின் இந்த செயல் மிகுந்த விமர்சனத்துக்கும், ஏலனத்துக்கும் உண்டாகி பொதுமக்களால் எள்ளி நகையாடப்பட்டது. இந்த நிலையில், தற்போது, சென்னையில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் நாள்தோறும் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும் 2,559 சாதாரண கட்டண பேருந்துகளுக்கும் முழுவதுமாக இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட உள்ளது.