இந்தியாவில் சில நாட்களாக உயர்ந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 12 ஆயிரத்து 751 ஆக குறைந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 74 ஆயிரத்து 650 ஆக அதிகரித்து வந்த நிலையில், கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 412 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 4 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 71 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 807 பேர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 772 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,06,88,49,775 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,95,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது