சமூக வலைதள நிறுவனங்கள், 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டு இருந்தால், அவர்கள் பெறப்படும் புகாா்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் படி மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும். அதன்படி, விதிமீறல் தொடா்பாக நிறுவனத்துக்கு வந்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கடந்த ஜூன் மாதம் மட்டும் 22.10 லட்சம் இந்தியா்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் 19 லட்சம் கணக்குகளும், ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளும், மாா்ச் மாதம் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்ஆப் முடக்கியிருந்தது.