மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று மாலை 56,857.79 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை ஏற்றத்துடனே தொடங்கியுள்ளது. பங்குச்சந்தை தொடக்கத்தில் சென்செக்ஸ் 460 புள்ளிகள் ஏற்றம் அடைந்துள்ளது. இன்று காலை 9.35 நிலவரப்படி இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,421.92 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 174.90 புள்ளிகள் அதிகரித்து 17,104.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு நிஃப்டி 17,000 புள்ளிகளை தற்போது தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.