வெங்கி அட்லுரி என்ற தெலுங்கு திரைப்பட இயக்குநர் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகி வரும் படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே வெளியான படத்தில் டைட்டில் வைத்தே ஆசிரியர் வேடத்தில் நடித்துள்ளதாக தனுஷ் ரசிகர்கள் யூகித்து இருந்தனர். இதையொட்டி தனுஷ் பிறந்த நாளான நேற்று வாத்தி திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில், ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில், ஜூனியர் ஆசிரியராக பணியாற்றும் நடிகர் தனுஷ் ‘படிப்புங்கறது கோயில் பிரசாதம் மாதிரி கொடுக்கனும், 5 ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாதிரி விக்கக்கூடாது’ என்று பஞ்ச் வசனம் பேசியுள்ளார். தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.