முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தனது அளப்பறிய இந்திய மக்கள் சேவையை முடித்துக்கொண்டு விடைப்பெற்றார். இந்த நிலையில், அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அடுத்த பேக்கரும்புவில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகவும், அறிவியலாளராகவும், மாணவர் சமுதாயத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.