மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் வசிக்கும் பிரியங்கா குப்தா என்பவருக்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரின் மாமனார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மனிதத் தவறால் இது நடந்துவிட்டதாகக் கூறிய மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் நடத்தப்படும் மின்சார நிறுவனம், புதிய மின்கட்டணமாக ரூ.1,300ஐ மாற்றி குறிப்பிட்டுள்ளது. இத்துடன், தவறான மின் கட்டணத்துக்கு காரணமான மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்கட்டணத்தை கணக்கிடும் கணினி மென்பொருளில் நுகரப்படும் யூனிட்டுகளுக்குப் பதிலாக ஊழியர் நுகர்வோர் எண்ணை உள்ளிட்டதால், அதிகத் தொகையுடன் மின்கட்டணம் வந்ததாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ஆனால், இதுபோல நடப்பது இதுவே முதல்முறை அல்ல ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தவறுதலாக மின்கட்டணம் மாற்றி அனுபப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.