புதுச்சேரியில் 15ஆவது சட்டப்பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கும் என சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார். அந்த முறை முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இத்துடன், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.