குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் போட்டட் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அந்த பகுதிகளைச் சேர்ந்த பலர் குடித்துள்ளதாக தெரிகிறது. இதனால், மது குடித்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு உடல் நலக் குறைவு மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் முதலில் 10 பேர் பலியாகினர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மாவட்ட காவல்துறையினர் கூறியுள்ளனர்.