44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை விளம்பரப்படுத்தும் பல்வேறு பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்துவது, சென்னை நேப்பியர் மேம்பாலத்தை செஸ் போர்டு போல வண்ணம் தீட்டுவது, விழிப்புர்ணவு விளம்பரம், பாடல், பொது இடங்களில் ஓவியங்கள் என பல முயற்சிகளை தமிழக அரசு செய்துள்ளது. அந்த வரிசையில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமாக “தம்பி” படம் இன்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. பொதுவெளியில் திரும்பிய இடமெல்லாம் இருக்கும் “தம்பி” மக்களின் வீடுகளுக்கும் செல்லும் வகையில் ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் தம்பி படம் பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் ஆவின் பால் பாக்கெட்களில் மக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பப்படும். தற்போது செஸ் விளையாட்டு போட்டியும் நமக்கு ஒரு பண்டிகை தான் என்பதால் அதனை ஆவின் தனது பாணியில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.