சமீப காலமாகவே வாட்ஸ் அப் செயலி பயனர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு அப்டேட்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது, வாட்ஸ் அப் குழுவில் இருந்து மற்ற பயனர்களுக்கு தகவல் அளிக்காமல் அமைதியாகக் குழுக்களை விட்டு வெளியேற அனுமதிக்கும் அம்சத்திற்கான பறந்த வெளியீட்டைக் கொண்டு வந்தாலும், அனைத்து பங்கேற்பாளர்களும் கடந்த 60 நாட்களில் குழுவிலிருந்து வெளியேறியவர்கள் யார் என்பதை, குழு உறுப்பினர்கள் பங்கேற்பாளர் வரிசையை சரிபார்க்கும்போது தெரிந்துகொள்ள முடியும். ஒரு பயனர் குழுவிலிருந்து வெளியேறிய 60 நாட்களுக்குப் பிறகு, கடந்தகால பங்கேற்பாளர்களின் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர் நீக்கப்படும் என்ற அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக வாட்ஸ் அப் செயலி பயனர்கள் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை இரண்டரை நாட்கள் ‘டெலிட் பார் எவ்விரி ஒன்’ ((delete for everyone)) என்ற வசதியை பயன்படுத்தி இருபக்கமும் நிரந்தரமாக அழித்துக்கொள்ளும் வசதி, தற்போது நடைமுறையில் உள்ள அழிக்க கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் என்ற அவகாசத்தை நீட்டித்து அப்டேட், அழிக்கப்பட்ட தகவல்களை, மீண்டும் திரும்பப் பெறும் வசதி, 512 என குழு உறுப்பினர்களை உயர்த்தி அப்டேட் என பல அப்டேட்களை உலகம் முழுவதும் பயனர்கள் பயன்படுத்தும்படியும், சோதனை அடிப்படியிலும் வாட்ஸ் அப் செய்து வருகிறது.