தலைநகர் டெல்லியில் உள்ள காவிரி நீா் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் அதன் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம் சாா்பில் நீர்வளத்துறை செயலாளா் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவா் சுப்பிரமணியம் ஆகியோா் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், மேகதாது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூலை 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.