உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் தன்னுடைய தாக்குதலை அதிகரித்து வரும் ரஷ்ய அதிபர் புதினின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு புற்று நோய் பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஊடங்களில் வெளிவந்தன. ஆனால், இந்த தகவலை முற்றிலுமாக ரஷ்ய அரசு மறுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய புலனாய்வு அமைப்பு இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உடல்நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகளே என கூறியுள்ளார். புதின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல நிரூபிக்கும் படியான உளவு தகவல் எதுவும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்த அவர், தன்னை பொறுத்தவரை அவர் அளவுக்கு அதிகமாகவே ஆரோக்கியமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.