பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட்டதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, அவருக்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான நிதி விவரங்கள் குறித்து தங்களது வழக்கறிஞர்கள் எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பியதற்கு, இதுபோன்று கேள்வி கேட்டு சிக்கல் ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று டுவிட்டர் சி.இ.ஓ-க்கு எலான் மஸ்க் எச்சரிக்கை தகவல் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தகவல் குறித்து எலான் மஸ்க் தரப்பில் கருத்து ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.